
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்க விசயமாக அமைந்திருந்தது.
தனது தாலிக் கொடியைக் கழற்றிக் கொடுத்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழ்த் தாய்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் பேராளர்களும் கண்ணீர் மல்க தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment