
காலம் கடந்தாலும் கண்ணீர் கன்னத்தை விட்டுப் போகாத ஆண்டு 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ல் தமிழகம் மட்டுமல்லாது தமிழீழம் தொட்டு தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் இன்று ஆண்டுகடக்கும் நினைவு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தமிழீழத்தில் பல இடங்களில் கொன்றுகுவித்ததை நினைக்கும் போது அந்த இடங்கள் பெயர் சொன்னாலே வலிகள் துளிர் விட்டு கொல்கின்றது.
தமிழகத்தில் பல இடங்களை காண்பிக்க ஊர்கள் பல அழிந்து அலை திரண்டது போன்று ஒவ்வொரு உதடில் தட்டுப்பட்டு நினைவுகளாய் மண்ணில் சிந்திக்கொய்கின்றது கதறலாயும் கண்ணீர்கள் இடம் பெயர்கின்றது.
இவை அத்தனையும் மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்காண மக்கள். வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் இவர்களது மறுவாழ்விற்காக பணம் வந்தாலும் அதை எல்லாம் சுருட்டி ஏப்பம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது ஒன்றுமே செய்யாமல் அவர்களை ஒவ்வொரு நாளும் வேதனைப்படவைக்கின்றதில் அடுத்த கண்ணீர் விம்பலாக மறைகின்றது.
பல தொண்டுநிறுவன இயக்குனர்கள். இவர்கள் கட்டிய பல வீடுகள் அட்டை வீடுகளாக ஒழுகுகின்றன.
கண்ணுக்கு குடைபிடித்த இமை மயிர்களில் இருந்து போவது கவிதை என்று போகலாம் வாழ்கையே இப்படி குருதி நனைந்த ஒழுக்குகள் நிறைந்த குடிசைகளாகவே இருக்கின்றது.
இதை அறிந்தவர்கள் வீடுகள் கட்டித்தருவதாக சொன்னவர்கள் இன்று வேறு என்ற பார்வையில் பட்டபடி சொல்கின்றனர்.
எரியும் வீட்டில் உயிர் பிடுங்கியவரை லாபம் என்றிருக்கும் இவர்களை அரசு இன்று வரை தட்டிக்கேட்கவில்லை.
இதில் கடற்கரையோரங்களில் வாழும் மீனவர்களில் நிலைதான் மிகப்பரிதாபம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் எந்த உத்தரவாதமும் கேட்காமல் நாட்டுடமையாக்கப்பட்ட பல ஆயிரம் தொகைக்கணக்கில் வங்கிக் கண்க்குகள் அவர்களுக்கு குவித்து விட்டனர்.
கடனுதவி செய்ய வேண்டுமென நிதியமைச்சர் கூறியிருந்தாலும் சம்மந்தப்பட்ட வங்கிகளோ பல ஆவணங்களைச் கொண்டு வரச்சொல்லி கடன் தரமறுக்கின்றன.
மேலும் மீனவர்களுக்கான நலவாரியத்தை தமிழீழம் தமிழகம் போன்ற அரசு அமைத்திருந்தாலும், அதனால் என்ன பயன் கிடைக்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. ?
ஆகவே இவ்வாரியங்களின் மூலம் நலத்திட்டங்கள் எதுவும் மீனவர்களைச் சென்றடையாமல் இருக்கின்றன.
மேலும் சுனாமிக்குப்பின் கடலில் நீண்ட தூரம் சென்றாலும் இவர்களுக்கு போதிய மீன்கள் சிக்குவதில்லை. பதிலாக தடைகளும் கைதாகி சடலமாக திரும்பும் உறவுகளாகவே தினம் சுனாமி போன்று வருகின்றது.
தொழில் சரியாக இல்லாததால் வறுமையில் வாடும் குடும்பம் ஒருபுறம், நீண்ட தூரம் மீன்பிடிக்கப்போய் இலங்கை அரக்கனிடமும் மறு புறம் இந்தியக்கடற்படையிடம் சிக்கிக்கொள்ளுவதும் தமிழகத்தவர்கள் இலங்கையில் பிடிபடுவது நித்தம் பார்க்கும் தினச்செய்திகளாகவே வருகின்றது.
மீனவர்களின் கடினங்கள் நிலை மறுபுறம் என அந்திரத்தில் ஊசலாடுகிறது இவர்களது வாழ்க்கை.
போதிய வருமானம் இல்லாததால் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீனவர்கள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கித்தவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்து கொண்டே போகிறது இவை இப்படி இருந்தும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கும் இவர்களது வாழ்வில் ஒளியேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தர விவசாய கூட்டுறவு வங்கிகள் உள்ளதுபோல, மீனவர்களுக்காக மீனவர் கூட்டுறவு வங்கிகளை அமைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வங்கிகள் மூலம் மீன்பிடி தொழிலுக்கு வேண்டிய புதிய வலைகள், படகுகள் முதலியவற்றை வாங்க உதவி செய்யவேண்டும். மீன்பிடிக்கப்போகும் இடங்களில் அயல் நாட்டு ராணுவத்தினரிடம் மீனவர்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க கடல் எல்லைகளைத் தெளிவாக குறிப்பிடவேண்டும்.
சுனாமியால் இழந்த உயிர்களை நம்மால் திருப்ப இயலாது..
குறைந்த பட்சம் இழந்த உடைமைகளையாவது திருப்பித் தர முயற்சி செய்யலாம்.
இயற்கையின் நேசத்தில் பிறந்த நாங்கள் இயற்கையின் மடியில் மண்டி இட்டு போகின்ற நாளில் மறுக்க முடியாத பாவிகள் போன்று துடிக்கின்றவர்களில் நாங்கள்.
எனினும் இன்றய நாட்களில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளுடன் உறவுகளாக நாமும் பகிர்ந்து கொள்கின்றோம்.


No comments:
Post a Comment