
வன்னி மாவட்டமான கிளிநொச்சி – சங்குபிட்டி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிகல் கப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்ததாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பிடித்து வந்து கொண்டிருந்த போது குறித்த சிப்பாய் சக இராணுவ வீரர் கைவசம் இருந்த துப்பாக்கியை எடுத்து சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததோடு, இராணுவ லெப்டினன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிப்பாய் கைது செய்யப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் கப்புஆராச்சி அத தெரண செய்திப் பிரிவிற்குத் தெரிவித்தார்.
உயிரையும் உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கே ஒப்புவித்தவன் தான் வீரன் அவன் பணத்திற்க்காகவும் உயிர்பயத்திற்காகவும் துடிக்கும் ஒவ்வொரு வீரனும் வீரன் அல்ல அவர்கள் சக மனிதர்கள் என்ற நிலைக்குள் தான் வாழ முடியும்.
இலட்சிய முள்ள ஒவ்வெரு வீரனையும் போராட்டத்தில் திணிப்பதால் தோல்விகளும் பலகீனங்களும் தான் இலகுவாக விளையும் என்பதை அறிவுள்ள வீரன் அறிவான்.
எனவே..
வீரம் என்பது ஒவ்வொரு தனிமனித மானப்பிரச்சனை என்றால் மட்டும் இதை இலட்சியங்களாக ஏற்க முடியும். புரிந்தால் அவன் தான் மாவீரன்.!


No comments:
Post a Comment