
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு கிறிஸ்மஸ் ஆராதனைகள் மிகவும் அமைதியாக நடைபெற்றன. இயேசு பாலகனின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பெருவிழாவை முன்னிட்டு தேவாலயங்கள் தோறும் பக்தர்கள் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வடக்கிலும் கிறிஸ்து பிறப்பையொட்டிய நள்ளிரவு திருப் பலி வழிபாடுகள் எதுவித கெடுபிடிகளும் இன்றி நடைபெற்றன. யாழ்.நகரில் யாழ். மரியன்னை தேவாலயத்தில் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றது. நகரில் ஏராளமானவர்கள் தேவாலயங்களில் கூடியிருந்தனர். பாலகன் இயேசு பிறந்த நாளை கிறிஸ்தவ மக்கள் வெடி கொளுத்தி குதூகலமாகக் கொண்டாடினர்.


No comments:
Post a Comment