
சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்தமாதம் நடத்தப்படவுள்ள பேச்சுக்களில் என்னென்ன விடயங்கள் குறித்துப் பேசுவதென்று இன்னமும் முடிவாகவில்லை என்று சிறிலங்கா அரசின் பேச்சுக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் பேச்சுக்களை நடத்தித் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
“அடுத்த சுற்றுப்பேச்சுக்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் 17ம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது ஆரம்பிக்கப்படும்.
அடுத்தமாத இறுதி வாரத்தில் மூன்று தடவைகள் பேச்சுக்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துக் கலந்துரையாடி தீர்மானிப்பார்கள்.
எனினும், கடந்த மார்ச் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விடயங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும்“ என்றும் பேராசிரியர்


No comments:
Post a Comment