
நாளுக்கு நாள் நாம் துடி துடிக்கும் கவலையும் கண்ணீரும் அங்கு எங்கள் சொந்தம் நலமா என்பதை அறிவது தான். ஆனால்..? அங்கு தினம் வரும் செய்திகளில் அடிக்கடி பார்க முடிந்தவை காணாமல் போய்விட்டனராம். அப்படி என்றால் இலங்கை என்பது காணாமல் போகும் நாடு தானா..?
கொழும்பில் இருந்து கடந்த 22.12.2011 ஆம் திகதி வாடகைக்கு அமர்தப்பட்ட வாகனம் ஒன்றில் யாழ்ப்பணம் நோக்கி வந்து கொண்டு இருந்த குடும்ப அங்கத்தவர்கள் 6 பேர் காணாமல் போயுள்ளதாக யாழ்.மனித ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரிவியவருது,….
கொழும்பில் இருந்து 22 ஆம் திகதி இரவு புறப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் சிங்கள பிரதேசமொன்றில் வாகனம் காற்றுப்போய் நின்றதாக யாழில் உள்ள உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வருவதாக இருந்தவர்கள் காணாமல் போயிருக்கலாம் என தாங்கள் அஞ்சுவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் 22 இரவு 11 மணியின் பின்னர் குடும்ப அங்கத்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள் வேலை செய்யவில்லை எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை வெளியிட யாழ்.மனித உரிமை ஆணைக்குழு மறுத்துள்ளது.
இவை தனிப்பட்ட முறையில் வந்த கண்ணீர்ச்செய்திகள் .
உறவுகளே..
உங்கள் உரிமைகள் இன்று புதைகின்றது இனி உங்கள் சிந்தனையும் செயலும் ஒரு நல்ல தீர்வுகள் தரும் என்பதில் ஐயம் இல்லை. எனினும் இந்த அனியாயங்களுக்கு என்னதான் முற்றுப்புள்ளி..?
மறுபடியும் ஆயுதங்களை தமிழீழ மக்கள் மத்தியில் திணிப்பதாகவே உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தால் எப்படி காணாமல் போக முடியும்..?
போனவர்கள் மீண்டு வருதன்றால் அங்கு ஆட்சியாளர்களின் நீதி முறை எவ்வகையானது…?


No comments:
Post a Comment