தானே புயல் காரணமாக, கரைப் பகுதிகளில் சேதம் ஏற்படக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக சரக்குக் கப்பல்கள் நடுக் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. சென்னைத் துறைமுகப் பகுதிக்கு வந்த சரக்குக் கப்பல்கள் மீண்டும் கடல் பகுதிக்குள் திருப்பியனுப்பப் பட்டன.இந்நிலையில், இன்று (30.12.2011) காலை புயல் காற்று பலமாக வீசியதில், நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் அலையால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கரைப்பகுதியில் நேப்பியர் பாலம் அருகிலுள்ள மதகுப் பகுதியில் அந்தக் கப்பல் தரை தட்டி நிற்கிறது. காற்று வேகமாக வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுத்துச் செல்ல இயலவில்லை என்றும், கடல்சீற்றம் தணிந்தபிறகே கப்பலை மீட்டு கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment