
50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால்விலை பேசி விற்கப்பட்ட சிறுமியி மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கயனோடையில்வைத்து பட்டிப்பளைப் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.மாடு வாங்க வந்த காங்கயனோடையைச்சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடாவைச்சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது குழந்தையை 50 ஆயிரம்ரூபாவிற்கு விலை பேசி ஞாயிற்றுக்கிழமை விற்றுள்ளார். குறித்த பணத்தை திங்கள் கிழமைவழங்குவதற்கான உடன்பாட்டில் நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர்வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தைஉத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங்கிய தகவலை அடுத்து பட்டிப்பளைபட்டிப்பளை பொலிஸார் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டிப்பளை பொலிஸாருடன் நவகிராமிய சிறுவர் அமைப்பு தலைவர் மா.பஞ்சலிங்கம்சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்எம்.வரதராஜன்கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர்காங்கயநேடைக்கு திங்கள் கிழமை சென்று காங்கயநோடையில் நயுமுதீன் வீட்டில் இருந்து சிறுமியைமீட்டுள்ளனர்.
அத்துடன் விலைபேசி வாங்கிச் சென்றநயுமுதீனையும் கைது செய்ததுடன் விற்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் பட்டிப்பளைப் பொலிஸார்கைது செய்துள்ளதுடன் இன்று சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில்பாரப்படுத்துவதுடன் விற்ற தந்தையையும் கொள்வனவு செய்த நயுமுதினையும் இன்று பட்டிப்பளைபொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
சிறுமியை விற்றவருக்கு மூன்று திருமணம்என்றும் ஏற்கனவே இரண்டையும் கைவிட்ட நிலையில் மூன்றாவது திருமணத்தில் பிறந்த மூன்றுபெண்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையே தற்போது விற்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2006ஆம் ஆண்டு மூன்றாவது பிள்ளைஒன்றரை வயதாகவுள்ளபோது இடவரால் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்த பிள்ளையின்நிலமை என்ன என்பது குறித்தும் இப் பிள்ளையினை மீட்கும் நடவடிக்கையிலும் தற்போதுபட்டிப்பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment