
அமெரிக்கா கொலம்பியா நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீது பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பில் அவர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கம் உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது.
எனினும் தற்போது அமரிக்க நீதிமன்றத்தில் ஜனாதிபதியின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த சட்டத்தரணியை ஒழுங்கு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை, மூதூரில் 17 அரச சார்ப்பற்ற பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையின் படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படைகளின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நட்டஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு அமெரிக்க கொலம்பிய நீதிமன்றம் அழைப்பாணையை அனுப்பி வைத்துள்ளது.


No comments:
Post a Comment