
தேசிய பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனவே தேசியப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் நிலையான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தேர்தலில் வடக்கு மக்கள் பாரியளவில் தமது கட்சிக்கு ஆதரவளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக வாக்களித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பதே வடக்கு மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள சிவாஜிலிங்கம், தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வைப்பதில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment