உள்ளுராட்சித் தேர்தலினூடாக வடக்கு – கிழக்கு தொடர்பான அரசாங்கத்தின் கடப்பாடு உணர்த்தப்பட்டிருக்கின்றது. எம் மக்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளை அரசாங்கம் எவ்வாறு நோக்குகின்றது என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் தென்பகுதியில் அரசாங்கத்துக்கு எந்தளவு ஆதரவு கிடைத்ததோ அதனையும் விட பன்மடங்கு அதிகமான ஆதரவினை வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் மக்கள் சக்தி இருக்கின்றது என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்பது மீண்டும் உணர்த்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment