
தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்தவொரு நாடொன்றிலும் பார்க்க தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ளது. அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும்.
விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. அந்த யுத்தத்தின் இறுதி மாதங்கள் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கமும் கிளர்ச்சியாளர்களும் தமிழ்ப் பொதுமக்களின் பாரிய இழப்புகளுக்கு பங்களிப்புச் செய்ததைப் பார்த்துள்ளன. அதிகளவு ஜனநாயகம் மற்றும் சமத்துவமான சமூகம் என்பனவற்றை நோக்கியதான வலி நிறைந்த பாதையில் மெதுவாக பயணிப்பதிலும் பார்க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யுத்தத்தின் பின்னரான கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன.
நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றமானது எப்போதுமே நெருக்கடியானதாக இருக்கப்போகின்றது. தசாப்த காலங்கள் நீடித்த அரசியல் வன்முறையும் உள்நாட்டு யுத்தமும் இலங்கையின் இன சமூகங்களை துருவமயப்படுத்தியிருப்பதுடன் நிறுவனங்களையும் அரசியல்மயமாக்கியுள்ளன. குறிப்பாக சட்டம் ஒழுங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. மோதல்களினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்தும் அல்லது இடம்பெயர்ந்தும் பீதி, புரிந்துணர்வின்மை என்பனவற்றுடன் இருக்கின்றனர்.
இந்த சவால்களுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. யுத்தமானது பயங்கரவாதத்தைப் பற்றியதே என்றும் இன நெருக்கடியால் ஏற்பட்டதல்ல எனவும் கூறுவதிலேயே அரசாங்கம் ஒட்டிக்கொண்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளியிலும் உத்தியோகபூர்வ கருத்திற்கு ஏதாவது சவால்கள் விடுக்கப்பட்டால் விசனத்துடன் பிரதிபலிப்புகளை வெளியிடுவதுடன், அவற்றை அரசு கட்டுப்படுத்துகின்றது.
அதேசமயம், 10 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கொடூரத்தை அங்கீகரிப்பதற்கு விருப்பமற்ற தன்மை காணப்படுவதுடன், தமிழ் சமூகத்தை அதிகளவுக்கு உடைத்ததற்கான புலிகளின் பொறுப்பிற்கான பங்கானது அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. ராஜபக்ஷக்கள் வேறுபட்ட கதையைக் கூறுகின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கம் முன்னெடுக்கப்படுவதாக அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஆழமான குறைபாடுகளைக் கொண்டவையாக உள்ளன. தென்னாபிரிக்காவின் ஜஸ்மின் சூகா உட்பட ஐ.நா. நிபுணர் குழுவானது அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறைபாடுகளைக் கொண்டன என்று தெரிவித்திருந்தது.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும் தென்னாபிரிக்காவின் உண்மை ஆணைக்குழுவின் முக்கியமான முன்னுதாரணத்தைக் கொண்டதாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு காணப்படவில்லை.
தென்னாபிரிக்க ஆணைக்குழுவின் தன்மையை இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு பொதுவான அடிப்படையில் கொண்டிருந்தாலும் அதன் பங்களிப்பு தற்போதும் குறைவானதாகவே உள்ளது. இலங்கையின் தோல்வி கண்ட நீண்ட வரலாற்றையும் மற்றும் ஜனாதிபதி விசாரணைகள் புறக்கணிக்கப்பட்ட தன்மையையும் நோக்கினால் இந்தப் பொறிமுறைகள் இறுதியில் அதிகாரமற்றதாகவே சென்றுவிட்டதைப் பார்க்க முடியும்.
ராஜபக்ஷக்கள் தீர்மானிக்காவிடின் நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாது. அவர்கள் அரவணைத்துக்கொண்டிருக்கும் சிங்கள தேசியவாத நோக்கத்திலிருந்தும் மாற்றத்தை ஏற்படுத்தும் எதனையாவது செய்வதற்கான ஆர்வத்தை அவர்கள் வெளிக்காட்டியிருக்கவில்லை. அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதே இதன் அர்த்தமாகும்.
இதற்குப் பதிலாக ஊடகங்கள் அரசியல் எதிராளிகளைத் தொடர்ந்தும் அவர்கள் அழுத்தத்திற்கு உட்படுத்துகின்றனர். 2010 இல் ஜனாதிபதியின் பதவிக்கால எல்லைகளை மாற்றுவதற்கான அரசியலமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கு வலுவூட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் சட்டமா அதிபர் நீதித்துறை மற்றும் பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்களில் ஜனாதிபதியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட வட பிராந்தியம் இப்போது இராணுவத்தின் மேலாதிக்கத்தில் உள்ளது. சிவில் நிர்வாகத்தை இராணுவம் கையிலெடுத்திருப்பதுடன், அன்றாட வாழ்க்கையின் சகல வடிவங்களையும் இராணுவம் கட்டுப்படுத்துகின்றது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான சாட்சியங்களை உறுதியாக அரசாங்கம் நிராகரித்து உள்ளது. அதேவேளை, பிரிட்டனின் சனல்4 ஜூன் 14 இல் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் அரச படைகள் எந்தவொரு தவறையும் இழைக்கவில்லையென இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர். ஆனால், மேலும் அதிகளவுக்கு ஆதாரங்கள் மேலெழுந்து வருகையில் அந்தக் குற்றச்செயல்களுக்கு வெள்ளையடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
எந்தவொரு பொறுப்பையும் எடுப்பதற்கு அரசாங்கம் மறுப்பதானது வன்முறைகள் மீளப்புதுப்பிப்பதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்து வருகின்றன. இந்த விடயத்தில் அடிப்படை மாற்றத்திற்கு சர்வதேச சமூகம் முன்தள்ளிவிட வேண்டிய தேவை காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா முக்கியமான பங்களிப்பை ஆற்ற முடியும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் சிபாரிசுகளை முன்கூட்டியே அமுல்படுத்துமாறு அணிசேரா அமையத்தின் உறுப்பினர்கள் மத்தியில் தென்னாபிரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும். இருதரப்பாலும் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கான அவர்களின் அழைப்புகளும் இதில் உள்ளடங்கும்.
போர்க்கால மற்றும் போருக்குப் பின்னரான தனது கொள்கைகள் தொடர்பான ஏதாவது சர்வதேச மட்ட பரிசீலனைகளை தனது இறைமையின் மீதான நவ காலனித்துவத் தாக்குதல்களென நிராகரிக்கும் இலங்கையின் முயற்சிகளை நிராகரிக்கச் செய்வதற்கு ஏனைய அரசாங்கங்களை தென்னாபிரிக்கா ஊக்குவிக்க வேண்டும்.
பாரம்பரியமிக்க தமிழ்பேசும் வட,கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் மற்றும் பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்தும் தனது உறுதிமொழிகளை அரசாங்கம் உறுதியாகக் கடைப்பிடிக்குமானால் இந்த மாதிரியான சர்வதேச கண்காணிப்பு மறைந்துவிடும்.
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவுக்கும் இடையில் பொருத்தமற்ற விதத்தில் நியாயபூர்வத் தன்மையை ஏற்படுத்தும். அந்த ஒப்பீட்டுத்தன்மைக்கு தென்னாபிரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படையாகக் கூறினால் அத்தகைய ஒப்பீட்டுத் தன்மையானது ஏளனப்படுத்துவதானதொன்றாகும். மீண்டும் ஏற்படாமல் தனது வன்முறை வரலாறு தொடர்பாக நீதியான முறையில் பொறுப்புக்கூறும் தன்மை இலங்கைக்குத் தேவைப்படுகிறது. இதற்குக் குறைந்த எதற்கும் இலங்கை மக்கள் இணங்கியிருக்கக் கூடாது.


No comments:
Post a Comment