
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதிக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் அவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதுமன் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் வரநாதனுக்கு எதிராக இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், படையினரை கொன்றதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பதுமனை, செப்டெம்பர் மாதம் அடுத்த வழக்கு விசாரணை வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி கே.எம்.வீ. ரணவீர இன்று உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்தபோது இவர் 2001 ஆம் ஆண்டு ஜூலை – டிசம்பரிற்கும் இடையிலான காலப்பகுதியில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment