சீன நிறுவனத்தின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து சிறிலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பொறுப்பேற்றுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்ட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின்னர் அது திறந்து வைக்கப்பட்டது.
தற்போது நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையமே சிறிலங்காவின் மின்சாரத் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வருகிறது.
நாளொன்றுக்கு 5000 தொடக்கம் 6000 மில்லியன் அலகுகள் வரையிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும்- அந்த மின்நிலையத்தை சிறிலங்கா மின்சாரசபை பொறுப்பேற்காமல் இருந்து வந்தது.
மின்நிலையக் கட்டுமானப் பணிகளின் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அதைப் பொறுப்பேற்க முடியும் என்று மின்சாரசபை அதிகாரிகள் கூறிவந்தனர்.
முழுஅளவில் மின்உற்பத்தி நடைபெறுவதால்,அதில் ஏற்படும் தொழில் நுட்பச்சிக்கல்களை தீர்க்க வேண்டிய நிலைக்குள்ளாக சீன கட்டுமான நிறுவனம் உடனடியாக மின்நிலையத்தைப் பெர்றுப்பேற்குமாறு சிறிலங்கா அரசுக்கு அறிவித்தது.
மின்நிலையத்தை பொறுப்பேற்கத தவறினால் தமது உடன்பாட்டை ரத்துச் செய்வோம் என்று சீன நிறுவனம் மிரட்டியிருந்தது.
உடனடியாக தரப் பரிசோதனைகளை செய்வதாயின் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அது சாத்தியமில்லை என்றும் சீன நிறுவனம் கூறியது.
மின் உற்பத்தியை நிறுத்தினால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் என்பதால், இது சீன நிறுவனத்தின் மிரட்டலுக்கு சிறிலங்கா அரசாங்கம் வேறு வழியின்றி அடி பணியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இந்த மின்நிலையத்தை சிறிலங்கா மின்சாரசபை பொறுப்பேற்றுள்ளது.


No comments:
Post a Comment