
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தற்போது கடவுளிடம் தஞ்சம் புகுந்துள்ளார். தன்னைக் காப்பாற்றுமாறு இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளதுடன் அவ் ஆலய கடவுள்களைத் தம் தோல் மீது தாங்கி வீதியுலாவும் வருகின்றார்.
அத்துடன் அவரது பரிவாரங்களும் அரோகரா அரோகரா எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் பின் கோசம் எழுப்பி வருகின்றனர்.
என்ன செய்வது தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்தி வந்த அமைச்சர் டக்ளஸைக் கடவுள் மன்னிப்பானா?
அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, ஆனால் அமைச்சருக்குத் தற்போது நன்றாக பொருந்தியிருக்கு.




No comments:
Post a Comment