இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக அங்கு வாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.இவர் மீது போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா., குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது. இதனை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., தி.மு.க,தலைவர் கருணாநிதி மற்றும் வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பையில் வாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் , தேடப்படும் குற்றவாளி ராஜபக்சே என கோஷங்கள் எழுப்பினர். இவரை கைது செய்ய வேண்டும் என்றும் இலங்கையின் அத்துமீறலுக்கும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டது.


No comments:
Post a Comment