
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்றும் ஏழு வயதுச் சிறுமிகள் முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் 32 சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்று சுகாதார துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். சிவரூபன். இந்த 32 துஷ்பிரயோகங்களில் 09 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை என்று குறிப்பிட்டார்.
2010 ஆம் ஆண்டு யாழில் 102 துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கூறுகின்றன என்றும் கடந்த வருடம் 182 துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கூறுகின்றன என்றும் சுட்டிக் காட்டிய டாக்டர் சிவரூபன் பாலியல் துஷ்பிரயோகங்கள் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையை உணர்த்தினார்.
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பலிக் கடாக்கள் ஆக்கப்பட்ட வயதுக்கு வராத சிறுமிகள் வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றனர் என்றும் 07, 08 வயது சிறுமிகள் முதல் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என்றும் பூப்படைகின்றமைக்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றமை மிக மிக ஆபத்தானது என்றும் டாக்டர் சிவரூபன் விளக்கினார்.
அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு நெடுந்தீவில் உட்படுத்தப்பட்ட 12 வயதுச் சிறுமி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வைத்தியசாலையில் அரை மணித்தியால சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று விபரித்தார்.
பாலியல் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன, ஆனால் தடுத்த நிறுத்த பொருத்தமான செயன்முறை இல்லாது உள்ளது, வெளியில் வராத சம்பவங்கள் எத்தனையோ இருக்க கூடும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர் இவ்வாறான சம்பவங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை என்றார்.


No comments:
Post a Comment