
தனது வீட்டில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவரை சிறிலங்கா கடற்படையை சேர்ந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது அவரின் ஆணுறுப்பை அப்பெண் அறுத்து எடுத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் தம்புழுகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆணுறுப்பை பறிகொடுத்த கடற்படை வீரர்(?) திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றுபவராவார்.
இரத்தம் ஓட ஓட கந்தளாய் வைத்தியசாலையின் ஏழாவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 வயதான இந்த கடற்படை வீரர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்த போது பின் கதவால் உள்நுழைந்து இந்தப் பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே மேசையில் இருந்த கத்தியை எடுத்து இவரது ஆணுறுப்பைஅந்தக் குடும்பம் பெண் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கடற்படை வீரர் குறித்து பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் வழங்கி விட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு ஓடிச்சென்றுள்ளார்.
பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதுடன் அறுத்து வைத்திருந்த ஆணுறுப்பையும் அப்பெண்ணிடம் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்தனர்.


No comments:
Post a Comment