
சனல்-4 வெளியிடப் போகும் அதிர்ச்சி தரும் புதிய காணொலி, ஜெனிவாவில் சிறிலங்காவை மட்டுமன்றி இந்தியாவையும் கூட சங்கடப்படுத்துவதாக அமையும் என்று இந்திய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியின் அதிர்ச்சி தரும் புதிய காணொலி, சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும்.
அது, ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து துணிவுடன் போராடும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரையும் கூட, சிறிலங்கா படையினரின் கொடூரங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தக் கோரும் வகையில் அமையக் கூடும்.
2009 மே 18ம் நாள் எடுக்கப்பட்ட வெளிப்படையான காட்சிகள் வரும் புதன்கிழமை இரவு 10.55 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் [இந்திய நேரம் வியாழன் அதிகாலை 4.25 மணி] ஒளிபரப்பாகவுள்ளது.
இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா பிரதிநிதிகளை மட்டும் சங்கடத்தில் ஆழ்த்தப் போவதில்லை.இந்தியாவையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment