
தென்னிலங்கையிலிருந்து வருகைதந்து வடமராட்சி கிழக்கில் அத்துமீறில் தொழில் செய்யும் சிங்கள மீனவர்களால் தாம் கடற்றொழில் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் வெற்றிலைக்கேணி இராணுவத்தினரது பாதுகாப்புடன் இராணுவ முகாமிற்கு அருகில் தங்கியுள்ளனர் என்றும் 25 படகுகளை தற்போது வைத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மீனவர்களின் நடவடிக்கையினால், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, தாளையடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராணுவத்தினருக்கு பொது மக்கள் தெரியப்படுத்தியபோது, ஜந்து நாட்களில் அவர்கள் சென்று விடுவார்கள் என்று இராணுவத்தினர் கூறியுள்ளனர். எனினும், அவர்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியிருக்கின்றனர் என தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், தாம் சம்பந்தப்பட்ட சகலருக்கும் தெரியப்படுத்தியபோதும், இதுவரையில் நடவடிக்கைகள் இல்லையென்றும் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளாது விட்டால் இங்குள்ள மீனர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையே தோன்றும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


No comments:
Post a Comment