ஐநாவை தமிழீழம் அலங்கரிக்க
புலிக்கொடியை கரங்களில் ஏந்தி
புலம்பெயர் தமிழர்களே வருக வருக
ஐரோப்பா முதல் நடை தொடங்கி
ஐநா முன்றலில் அணிசேர்க்க
உலகை திரும்பசெய்து உண்மையை உணர வைக்க
உறங்கா தமிழினத்தின் உரிமையை நிலை நிறுத்த
முப்பது நாட்களாய் முகம் சோரா வலி சுமந்து
முன்னை தமிழரின் கனவை நனவாக்க
புலியாய் பகைவருக்கு கிலியாய்
வலிமை சேர்த்து தமிழர் உரிமை பேண
வீறு நடை பயின்று வரும் வீர தமிழருடன்
அன்னை தமிழினமே அணியணியாய் திரண்டிடுவோம்
முள்ளிவாய்க்கால் துயருக்கு முடிவு கட்டிடுவோம்
வெள்ளப்பெருக்கென வேங்கையாய் ஒன்றிணைவோம்
பறக்கட்டும் தமிழர் கொடி உலகெங்கும்
சிறக்கட்டும் தமிழர் புகழ் உலகெங்கும்
மலரட்டும் தமிழீழம் மகிழ்ச்சி பொங்க
மிளிரட்டும் தமிழர் வாழ்வு வன்னி மண்ணில்
தமிழீழம் தமிழர் தேசியம்
தமிழீழம் தமிழர் தாய் நாடு
என்றும் தமிழர் பணியில்
ஏ சேகர்
(தமிழகம்)


No comments:
Post a Comment