மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் மர்ம முறையில் உயிரிழந்த வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மரணமடைந்தவர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயச்சந்திரன் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என சடலமாக மீட்கப்பட்டவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பதில் நீதிபதி எம்.ஐ.எம்.சியாம் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இம்மரணம் தொடர்பாக கரடியானறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment