
கனசிங்கபுர பஸ் நிலையத்தில் இருந்து மினுவாங்கொட நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ்ஸில் பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து இராணுவத்தினன் ஒருவர் தங்க சங்கிலியை களவாடியுள்ளார்.
கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓட முயற்சித்த குறித்த இராணுவத்தினனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
அதன் பின்னர் வெல்லவீதி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து களவாடப்பட்ட இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இலங்கை இராணுவ தலைமையகத்தில் முதலாவது ஆயுத புலனாய்வு படையில் ´கொப்ரல்´ பதவியில் இருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லவீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment