இந்த சம்பவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
’’ராம் தேவின் முகத்தை கறுப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஜனநாயகத்தை கறுப்பாக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய செயலில் ஈடுபட்டோரின் நோக்கமாகும். ஒருவரின் வாழ்க்கை கறுப்பு மையை ஊற்றுவதால் களங்கப்பட்டு விடாது.
இந்த மை இரண்டு நிமிஷத்தில் அழிந்துவிடும். ஆனால் ஊழல் கறை படிந்தவர்கள் மீதான கறை எதை ஊற்றிக் கழுவினாலும் போகவே போகாது.
ராம் தேவ் எப்போதுமே மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூக மேம்பாட்டுக்காகவும் பாடுபடுபவர். எங்களைப் போன்ற லட்சக்கணக்கானோரின் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு என்று ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது. மாறாக அது மேலும் வலுப்பெறும்’’ என்று ஹசாரே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் ஹசாரேயின் ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு ராம்தேவ் ஆதரவு தெரிவித்து உறுதியான லோக்பால் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திவந்தார். பின்னர் ராம்தேவ் தனித்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.


No comments:
Post a Comment