
இலங்கையின் 64வது சுதந்திர தின விழா தமிழகத்திலும் நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மகாபோதி சபையும், தென்னிந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உதவி தூதுவராலயமும் இணைந்தே செய்கின்றன.
இலங்கையின் சுதந்திர தின விழா 2001ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடர்ந்தும் தமிழகத்தில் இடம்பெற்று வருகின்றன. இம்முறை இடம்பெறுவன 12ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இடம்பெறவுள்ள மேற்படி இலங்கையின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளினால் தமிழக மக்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன், இரு நாட்டு மக்களுக்கு இடையில் அந்நியோன்ய நம்பிக்கையை கட்டியெழுப்புவதே மகாபோதி சபையின் நோக்கமாகும்.
பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள மேற்படி சுதந்திர தின விழாவில் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் இந்தியாவில் தஞ்மடைந்துள்ள இலங்கையர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


No comments:
Post a Comment