
நடிகர் தனுஷின் வை திஸ் கொலை வெறிபாடலினால் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விவாதம் சுவாரஷ்யமாக இருந்ததுடன் சபையில் இருந்த இருதரப்பினரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஊழியர் சேமலாப நிதிய (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து வை திஸ் கொலை வெறி எனக் கேட்க எமக்கு நோ கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்த வேளையிலேயே சிரிப்பொலி எழுந்தது.
ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் தனதுரையில் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இங்கோ ஜே.வி.பி.யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலை வெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர். சுனில் ஹந்துன்நெத்தி எம்.பியே வை திஸ் கொலை வெறி எனக் அஸ்வர் எம்.பி. கேட்கையில் நோ கொலை வெறி நோ கொலை வெறி என சுனில் எம்.பி. தெரிவித்தார். இதன்போது அவையில் இருந்தவர்கள் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிதனர்.
இதனிடையே அஸ்வர் எம்.பி.யை அடுத்து உரையாற்றிய யோதகராஜன் எம்.பி. வை திஸ் கொலை வெறி பாடலை சரியாக புரிந்து கொள்ளாத அஸ்வர் எம்.பி. தவறான அர்த்தத்தை கற்பித்து கொலை வெறியை தூண்டும் வகையில் அர்த்தம் கற்பிக்கின்றார் என சுட்டிக்காட்டினார்.
வை திஸ் கொலை வெறி எனும் பாடலுக்கு நல்ல பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. எனினும் அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு உள்ள கொலை வெறியில் தான் இந்தப் பாடல் பாடப்பட்டதாக கூறிகின்றார். அது தவறானது என்றார்.


No comments:
Post a Comment