ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் கெஹெலிய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர் மௌனம் காப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்ட குறித்த அமைச்சர் தெரிவித்தார்.அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது மனக் குறையைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சரின் தலையைத் தடவிய ஜனாதிபதி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மௌனமாகவும், நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார். இப்பிரச்சினை இதற்கு மேல் தொடர்ந்தால், சவேந்திர சில்வாவிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் சமுகம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரினதும், மகளதும் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பு எனக் கூறியுள்ள மகிந்த, சிறிது காலம் சென்ற பின்னர் சவேந்திர சில்வாவிற்கு தண்டனையொன்றை வழங்குவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு உறுதியளித்துள்ளாராம்.


No comments:
Post a Comment