
ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பொதுவாக விடுமுறை காலமாக அமைகின்றபோதும் சிறிலங்கா அரசுக்கு அவ்வாறு இருக்காது என்றும், கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் அது இருப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
டிசம்பர் மாதம் பொதுவாக விடுமுறை காலமாக கழிக்கப்படுகின்ற போதும் சிறிலங்கா அரசு அடுத்து வரும் வாரங்களில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக தற்காப்பு மூலோபாயங்களை வகுக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசு உள்ளது.
அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவின் மனிதஉரிமை விவகாரம் குறித்து கலந்துரையாடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், டிசம்பர் விடுமுறைக் காலங்களிலும் கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசு இருப்பதாகவும் கொழும்பு வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்க்கு தமது தூதுவர் பற்றீசியா புற்றெனிசை அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசிடம் அமெரிக்கா கோரியுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment