
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவுசெய்யும் மாவீரர்நாள் பிரித்தானியாவில் ஆறுஇடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
மண்டபங்கள் திறக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே மண்டபங்கள் நிறைந்து,மண்டபத்துக்கு வெளியிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செய்தனர். மிகவும் உணர்வுமிகுந்ததாக இன்றைய நிகழ்வுகள் அமைந்திருந்தன.
தாயகவிடுதலைக்காக தமது இனியஉயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவில் உருகி வணக்கம் செய்த மக்கள் மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்த பெருந்திரளான மக்களுக்கும் இடம்கொடுக்கும் விதத்தில் நகர்ந்துகொண்டே இருந்தது எல்லா மண்டபங்களிலும் காணக்கிடைத்தது.




No comments:
Post a Comment