லண்டன் விவர்பூல் பகுதியில் ஈழத்தமிழரின் கடையில் பணியாற்றிவந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாமல் வந்த இளைஞர்களின் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.குறித்தபகுதியில் ஈழத்தமிழரின் கடையில் பணியாற்றிய 30 அகவையுடைய ஈழத்தமிழ் இளைஞன் நேற்று முன்னாள் வழமைபோல் பணியாற்றிக்கொண்டிருக்கையில் முகத்திற்கு கறுத்த துண்டு கட்டிவந்த இளைஞர்கள் குறித்த இளைஞனின் களுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள். இவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துசென்ற போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment