ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தண்டனை அனுபவித்துவரும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்ற பலர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதிலும் செங்கொடி என்னும் பெண் தன்னையே எரித்து இந்த தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால் காங்கிரஸ் காரர்கள் இதனை விட்டபாடாக இல்லை. இந்த மூவரையும் தூக்குமேடைக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம் என்று இரவு பகலாக என்ன செய்யலாம் எனத் திட்டம் போடுகிறார்கள். இவர்கள் கொலைவெறிக்கு ஒரு அளவே இல்லையா ? இவர்களும் மனிதப் பிறப்புக்காளா என வெட்கி நாணும் அளவுக்கு இவர்கள் செயல் அமைந்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு தலைவராக முன்னர் இருந்த மூப்பனார் பெயரைச் சொல்லி "மூப்பனார் பேரவை" என்னும் இயக்கம் ஒன்றை எல்.கே. வெங்கட் என்பவர் நடத்திவருகிறார். அவர் தூக்குதண்டனைக் கைதிகளின் மனுவை சென்னையில் விசாரிக்கக்கூடாது எனவும் அதனை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் எனவும் இந்திய உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார் என்றால் பாருங்களே. கொலைவெறி ஒரு காரணமாகவும் தனது பெயர் அகில இந்திய அளவில் பேசப்படவேண்டும் என்பதற்காகவும் இந்த வெங்கட் இப்படி ஒரு ஈனத்தனமான காரியதைச் செய்திருப்பதோடு எலும்புத் துண்டைப் போடும் சோனியாவுக்கும் வாலாட்டி நிற்கிறார்.
தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றில் நீதி கிடைக்காதாம் என்பது இவரது வாதம். அதாவது 3 பேரின் வழக்கை விசாரித்து தமிழ் நாடு நீதிமன்றம் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்துவிட்டால் அவர்கள் மூவரும் தப்பிவிடுவார்கள் என வெங்கட் சொல்கிறார். அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு அல்லது டெல்லிக்கு மாற்றவேண்டுமாம். இதற்காக இவர் கூறும் காரணம் என்ன தெரியுமா ? வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தால் விசாரணையை சுதந்திரமான சூழ்நிலையில் நடத்த முடியாது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி நீதிமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவார்கள் கடந்த முறை வழக்கு நடக்கும்போது சுமார் 5000 பேர் வரையில் நீதிமன்றைச் சூழ்ந்து நின்றனர் என்று காரணம் காட்டுகிறார் இந்த வெங்கட்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கும் கலைஞருக்கும் தமிழ் நாட்டு மக்கள் நல்ல பாடத்தை புகட்டினார்கள். 90% சதவீத ஆதரவை தமிழ் நாட்டில் இழந்து நிற்கும் காங்கிரஸ் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஆதரவையும் இழக்கப் போகிறது என்பதனை இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. காங்கிரஸ் என்னும் கட்சியை தமிழ் நாட்டில் குழிதோண்டிப் புதைக்கவேண்டும் என அண்ணன் சீமான் ஏன் முழக்கமிட்டார் என்று இப்போது புரிந்திருக்கும் என நாம் நினைக்கிறோம். தன்னைச் சுட்ட கோட்ஸேயை தண்டிக்கவேண்டாம் என்றார் அண்ணல் காந்தி. ஆனால் அவர் வழிவந்த காங்கிரஸ் கொலைவெறியர்களாக மாறியுள்ளனர்.


No comments:
Post a Comment