இந்தத் தேர்தலுக்கான சகல பணிகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் அனுசரணையுடன் அவுஸ்திரேலிய நாட்டின் தேர்தல் ஆணையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
விக்டோரியா மாநிலத்திலிருந்து திரு. செல்வேந்திரன் சீவநாயகம் அவர்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து திரு. யோகராஜா தர்மலிங்கம் அவர்களும் திரு. கனகசபாபதி ஸ்ரீசுதர்சன் அவர்களும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இத் தவணையின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்கு அரசவை அங்கத்தவர்களாகப் பணிபுரிவார்கள்.
இவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்திரேலிய நாட்டின் தேர்தல் ஆணையமும் எம்முடன் இணைந்து வாழ்த்துகின்றது.
திருமதி. செ. ஸ்ரீதாஸ்
திரு. என். விஜயசிங்கம்
தேர்தல் ஆணையாளர்கள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்.
செப்டெம்பர் 12, 2011


No comments:
Post a Comment