அவ் வகையில் Frankfurt ,Nürnberg ,Mettingen ,Bremen ,saarbrücken பல நகரங்களில் அஞ்சலி நிகழ்வுகளில் அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து தமிழினப் பெருமகள் தோழர் செங்கொடியின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கப் பட்டது.
இதே நேரத்தில் யேர்மன் Frankfurt நகரிலும் உள்ள இந்திய தூதரக பிரதிநிதியின் காரியாலயம் முன்றலிலும் கவனயீர்ப்பு நடைபெற்றது. யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையின் சார்பில் இந்திய துணைத் தூதரகத்திற்கு மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது. முதலில் மனுவை ஏற்க மறுத்த அதிகாரிகள் கவனயீர்பில் கலந்து கொண்டிருந்த யேர்மன் நாட்டின் அம்மையார் ஒருவரின் முயற்சியால் இறுதியில் ஏற்றுக் கொண்டனர்.
நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம். மரணதண்டனையை ஒழிப்போம்.
நன்றி.
தகவல்
யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை


No comments:
Post a Comment