இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க சுமார் 40 நிமிடங்கள் தாமதித்ததாக அறியப்படுகிறது. ஆனால் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பரவாயில்லை தாம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த பின்னரே செல்வேன் என கண்டிப்பாக கூறிவிடார் ரொபேட் ஓ பிளேக். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர் எனவும் பின்னர் மாணவர்களை ரொபேட் ஓ பிளேக் சந்தித்தார் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில ஈ.பி.டி.பி கூலிப்படையினர் ரொபேட் ஓ பிளேக் 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வைத்து யாழ் பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார் என்று சிங்கள ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளனர். ஊடகவியலாளர் ஒருவர் ரொபேட் ஓ பிளேக் எந்த ஊடகத்துக்கு அப்படிச் சொன்னார் என்று கேட்டபோது கூட்டத்தில் நின்ற கூலிப்படையினர் எவருக்குமே அகு குறித்து தெரியாதாம். மண்டையைச் சொறிந்தவாறு நாங்கள் கேள்விப்பட்டோம் அவ்வளவுதான் என்றார்களாம். ஈ.பி.டி.பி கூலிப்படையினருக்கு அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என்று கேட்டாலே தெரியாது, அதிலும் ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவில் தெரிவித்தார் என்று கூறுவது கொஞ்சம் ஓவரா இல்லையா?
1984ம் ஆண்டு காசுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த அலன் தம்பதியினரை கடத்தியது இந்த ஈ.பி.டி.பியினர் தான் என்பதனை எவரும் மறந்துவிடவில்லை.


No comments:
Post a Comment