
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய அரங்கில் ஆதரவான காற்று மெல்ல மெல்ல வீச ஆரம்பித்துள்ளது.
உயிர் கொடுத்த போராளிகளின் தியாகங்கள் வீண்போவதில்லை என்ற வரலாறு கண் முன் நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் நண்பனான கேணல் கடாபிக்கு எதிராக விடுதலைப் புலிகளைப் போல போராடிய போராளிகளுக்கு ஐ.நாவில் உறுப்புரிமை கிடைத்துள்ளது. மொத்தம் 114 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன, வெறும் 17 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளன. இதில் அதிகமானவை சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளாகும். சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கவில்லை.
ஐ.நாவின் லிபியாவுக்கான ஆசனத்தில் போராளிகள் தரப்பில் இருந்து புதிய பிரதிநிதிகளாக அப்துல்ரகுமான் சல்காம் அமரவுள்ளார். போராட்டக்குழுவான ரீ.என்.ஏயின் பிரதிநிதி ஐ.நாவில் அமர்வது போராட்டத்தை நடாத்திய ஈழத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். லிபிய போராளிகளான ரீ.என்.ஏ போலவே விடுதலைப் புலிகளும் ஐ.நாவால் அங்கீகரிக்கப்படும் போராட்டக்குழுவாக வரும் நாள் மெல்ல உருவாகிறது. இதன் ஓரங்கம் போல வரும் 23 ம் திகதி பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர அங்கத்துவம் வழங்கும் பிரேரணை வருகிறது. பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை கிடைத்தால் அதற்கு அடுத்த உறுப்புரிமை ஈழத் தமிழருக்கே என்பதில் மறுபேச்சுக்கும் இடமுண்டோ..?
இது இவ்விதமிருக்க கேணல் கடாபி தொடர்ந்து போரை நடாத்துவார், நீண்ட போர் ஒன்றுக்கு தமது படையணிகள் தயாராவதாக கடாபியின் இராணுவப்பிரிவை சேர்ந்த மூஸா இப்ரகீம் தெரிவித்தார். நேற்று கடாபியின் சொந்த நகரான பானி வலீட்டில் நடைபெற்ற கடும் போரில் வெல்ல முடியாது போராளிகள் பின்வாங்கிய பின்னர் மேற்கண்ட தெனாவட்டு கருத்து வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment