
இறுதிப்போரின் போது 57 ஆவது படையணிக்கு தளபதியாக இருந்த இராணுவ ஜெனரல் ஜெகத் டயஸை இலங்கை மீள அழைத்துள்ளதாக சுவிஸ்ட்ஸர்லாந்தின் செய்தி சேவை தெரிவித்துள்ளது.ஜெகத் டயஸ், சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதுவராக செயற்பட்டு வந்தார்.
இறுதி;ப்போரின் போது அவரே பொதுமக்கள் இலக்குகள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்களை நடத்துமாறு படையினருக்கு உத்தரவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஐரோப்பாவின் மனித உரிமைகளுக்கான சட்டவாக்க நிலையமும், ஜெகத் டயஸ், சித்திரவதை, கொலைகள் என்பவற்றில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தது.
இது தொடர்பில் கடந்த மாதத்தில் சுவிஸ் வெளியுறவு அமைச்சு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்ட குறித்த குற்றச்சாட்டின் தீவிர நிலைமைகளை விளக்கியிருந்தது.
இதனையடுத்து ஜெகத் டயஸ் இலங்கை அரசாங்கத்தினால் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment