நா.க. த. அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் பின் வருமாறு தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
மிகவும் துக்கம் நிறைந்த இந்நாளில் தமது உயிர்களை ஈந்த மக்களை பெருமையுடன் நினவு கூர்வதுடன், உயிர் இழந்தவர்களதும் காயமுற்றவர்களதும் குடும்பங்களுடன் இணைந்து அவர்களனை வரையும் நினைந்து எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்தகைய துயரங்களையும் வேதனைகளையும் மானுடத்துக்கு எதிரான குற்றச் செயல்களினாலும், போர்க்குற்றங்களினாலும் தமிழ் மக்கள் நன்கு அனுபவித்து வந்துளார்கள் எனும் வகையில், நாங்கள் செற்ரெம்பர் 11ல் நிகழ்ந்த அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை நன்கு உணர்கின்றோம்.' என அவர் தமது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட நான்கு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இடங்களை, அதாவது நியுயோர்க் வர்த்தக நிலையம், அமரிக்க கூட்டுப்படைத் தலைமையகம், பென்சில்வேனிய வயல் பகுதி ஆகியவற்றைத் தாக்கிய இக் கொடிய நிகழ்வுகளில்,
3௦௦௦ வரையிலான அப்பாவி மக்கள் உயிர் இழந்ததுடன், பல ஆயிரகணக்கானவர்கள் காயமுற்றனர் என்பதனையும் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் அலுவலகம்,
நாடுகடந்த தமிழீழ. அரசாங்கம்


No comments:
Post a Comment