இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது அரச படையினரால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று சித்திரித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவை அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பார்வையிட உள்ளார்கள். வொஷிங்டனில் உள்ள காங்கிரஸ் அரங்கத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இப்படம் காண்பிக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அமெரிக்க கிளை, நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு, வெளிப்படைச் சமூகத்துக்கான ஸ்தாபனம், Tom Lantos மனித உரிமைகள் ஆணைக் குழு ஆகியன மேற்கொண்டு உள்ளன.
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் ஒருவரும், Tom Lantos ஆணைக்குழுவின் இணைத் தலைவருமான Jim McGovern படத்தை திரையிடுகின்றமைக்கு முன்பாக அறிமுக உரை ஆற்றுவார்.
போருக்கு பிந்திய இலங்கையின் தற்போதைய நிலைமைகள், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியன குறித்து படக் காட்சி முடிவடைந்த பின்னர் பேராளர்கள் கலந்துரையாடுவார்கள்


No comments:
Post a Comment