
யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது.
சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை தெரிவித்துள்ளதுசில மாற்றங்களுடன் சங்கிலியன் சிலை மீள நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழ்மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறுகள் இவ்வாறான தென்மையுடைய சிற்பங்கள் சிலைகள் கட்டடங்களை வைத்தே தமிழ்மக்களின் வரலாறு அமைகின்றது அந்தவகையில் தமிழர்களின் வரலாற்றினை மாற்றி அமைக்கும் முயற்சியாகவே சிங்கள அரசின் இவ்வாறான செயல்கள் காணப்படுகின்றன அதாவது இந்த சிலை மாற்றி அமைப்பு ஊடாக சிங்கள ஆட்சியிலோயே இது நிறுவப்பட்டது என்பதை இனிவரும் காலங்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளார்கள்.
அண்மையில் வன்னியில் உள்ள ஒட்டிசுட்டான் பகுதியில் உள்ள கற்சிலைமடுஎனும் இடத்தில் உள்ள பண்டாரவன்னியன் சிலை சிறீலங்காப்படையினரால் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment