
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா இன்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், எக்ஸ்ரே பரிசோதனைகளின் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும், இது ஓர் அற்புதமான ஆச்சரியம் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எரிபொருளில் கலப்படம், மின்சார விநியோகத் துண்டிப்பு என நாட்டு மக்கள் பல வழிகளில் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தினந்தோறும் சிகிச்சை பெறவேண்டும் மருத்துவர்கள் ஆலோசனை
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அவரது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வாரத்தில் 7 நாட்களும் மருத்துவமனைக்கு செல்லவேண்டியுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகா உரிய காற்றோட்டம் இல்லாத வசதியற்ற அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குறைந்த வசதிகளே செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜாகொட குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment