'இலங்கையின் கொலைக்களங்கள்' காணொளி தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளரை கோடிட்டு ஏ.எப்.பி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இதுவரை இந்த விடயம் தொடர்பாக இந்திய கருத்தை எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.
அது இலங்கையின் பொறுப்பு என்று தட்டிக்கழிக்கும் போக்கை கடைப்பிடித்து வந்தது.
எனினும் நேற்று இந்திய இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திகளின்படி இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தில் கேள்வி எழுப்பப்படுவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அந்த நாட்டின் கருத்தை இந்திய பேச்சாளர் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் ஏ.எப்.பி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை விசாரணை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி குறிப்பி;ட்டுள்ளது.


No comments:
Post a Comment