அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அது முன்னெடுக்கிற முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பு நல்க முடிவு எடுத்திருக்கிறது. ஈழத்தில் மறுவாழ்வு பணிகள் முறையாக நடப்பது இல்லை. இந்திய அரசு அளித்த உதவித் தொகை முறையாக மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.
வன்னிப் பகுதி முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. நிலையான ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட கலாச்சார சீரழிவு நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் என்கிற பெயரால் 11 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமணக்கூடங்களில், தனியார் இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைசெய்யப்படுகிறார்கள்.
சிங்கள ராணுவத்தினால் தமிழ் பெண்கள், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதையெல்லாம் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்து வருகிறது. குறிப்பாக இந்திய அரசு இதை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.


No comments:
Post a Comment