
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும்போது ஒரு சில புலம்பெயர் தமிழர்களினால் ஏற்படும் சவால்களை எதிர்நோக்கத் தயாராவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாத்தறை மொறவக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையை விட்டு வெளியேறிச் சென்ற சில புலம்பெயர் சமூகங்கள் நாடு தொடர்பான பிழையான விம்பமொன்றை வெளிக்காட்ட முனைப்பு காட்டி வருகின்றது. நாம் பெற்ற சுதந்திரத்தை அவை மறைக்க முயற்சிக்கின்றன.
இவ்வாறான சவால்களை அரசாங்கம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மீள்கட்டுமானப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நகரத்திற்கு மட்டும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் கிராமங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


No comments:
Post a Comment