
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப் புகழ்கின்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக் கிரியைகள் பெருந்தொகையானோர் முன்னிலையில் இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு - பொரளை கனத்தையில் இடம்பெற்றன.
பேராசிரியர் கா.சிவத்தம்பி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மாரடைப்பால் 79 ஆவது வயதில் காலமானமை தெரிந்ததே.
அவரது பூதவுடல் கடந்த வியாழக்கிழமையில் இருந்து தெஹிவளை, வெண்டவர்ட் பிளேசிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இன்று மதியம் 12.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் இரங்கல் கூட்டம் இடம்பெற்றது.
தமிழ் அறிஞர்கள், புத்திஜீவிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டு இரங்கல் உரை ஆற்றினர்.
மாலை சுமார் 3 மணியளவில் அன்னாரது உடல் தாங்கிய பேழை ஊர்வலமாக பொரளை கனத்தையை நோக்கி எடுத்து வரப்பட்டது.
மாலை 4.15 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.








No comments:
Post a Comment