
ஆப்கானிஸ்தானில் நான்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் ஏழு பேர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் பரா மாகாணத்தின் பலா புலக் மாவட்டத்தில் நேட்டோ படைகளின் சார்பில், 28 பேர், கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களை, ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
முதலில், இவர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கடத்தியவர்கள் கொள்ளையர்கள் எனத் தகவல்கள் கிடைத்தன.
கடத்தப்பட்டவர்களில் ஏழு பேரின் உடல்களை பொலிஸார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுத்தனர்.
இவர்கள், ஆப்கானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மற்றையவர்களின் நிலை என்னவென இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
ஆப்கானின் கிழக்கு மாகாணமான கோஸ்ட் மாகாணத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 கண்ணி வெடி அகற்றும் அமைப்பொன்றின் பணியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.
எனினும் பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment