ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் அர்ஜுன் முண்டா தலைமையிலான மந்திரிசபையில் வேளாண்மை அமைச்சராக சத்யானந்த் பதவி வகித்து வருகிறார்.இவரது ஜம்தரா தொகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை சோனியாதேவி, அமைச்சர் சத்யானந்த் தன்னை ரகசிய திருமணம் செய்ததாக கடந்த ஆண்டு பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதை அமைச்சர் மறுத்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சத்யானந்த் ஜா பட்டுல் என்னை 1996-ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
எங்கள் உறவுக்கு சாட்சியாக எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும், ’’எனக்கும் என் மகனுக்கும் சட்டரீ தியான உரிமையும், சமுதாய அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். என் மகனுக்கு மந்திரி பட்டுல் தான் தந்தை என்று நிரூபிக்கும் வகையில் அவரை மரபுபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மந்திரி சத்யானந்த் ஜா பட்டுல் கடுமையாக மறுத்துள்ளார். 1996-ல் என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறும் அந்த பெண், இத்தனை ஆண்டுகளாக ஏன் மவுனமாக இருந்தார்? நான் மந்திரியான பிறகு இந்த சர்ச்சையை எழுப்புவது ஏன்? சாதாரண பெண் அளிக்கும் புகாருக்காக நான் ஏன் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்? என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பூ பென் சவுத்ரி என்பவர் ஆசிரியை சோனியாதேவி என் மனைவி. அவரது மகனும் எனக்கு பிறந்தவன் தான் என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment