இந்தியாவின் 100 வது விண்வெளி திட்டம் வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் விண்ணில் ஏவப்படும் செய்மதியுடன் நிறைவேறும் என்று இஸ்ரோ நிறுவனர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ நிறுவனர் ராதா கிருஷ்ணன், எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவின் 100வது செய்மடி ஸ்ரிஹறிக் கோட்டாவில் ஏவப்படவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பிஎஸ்எல்வி சி 22 ரக ராக்கெட்டில் ஏவப்படும் இந்த செய்மதி பிரான்ஸ், ஜப்பான் நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட இரண்டு செயற்கைக் கோள்களை சுமந்தபடி விண்ணில் ஏவப்படவிருக்கிறது இஸ்ரோ நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைப் பெற்றுவருவதாகவும் தெரிகிறது.


No comments:
Post a Comment