இப்படிக்கு செங்கொடி ஒரு அற்புதமான படம். செங்கொடி என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம், ஈழவிடுதலைக்கு ஆதரவு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தைப் பற்றி பேசுகையில், இயக்குநர். ம.செந்தமிழன், “ நான் இயக்கிய ‘பாலை’ திரைப்படம் குறுந்தகடு (டிவிடி) விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தைப் பற்றி பேசும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற பேராவலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இப்படத்தை பற்றி ஐந்து நிமிடங்கள் பேசுகிறார். அதனால் நாம் தமிழர் கூட்டங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ‘பாலை’ டிவிடிக்கள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் விற்பனை ஆகி வருகின்றன.


No comments:
Post a Comment