இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று இச்செயலை அரங்கேற்றியுள்ளது. உந்துருளி, மற்றும் வெள்ளை ஊர்தியில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்த காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு, கட்டிடத்தின் மீது கழிவு ஒயிலை ஊற்றியுள்ளனர். மேலும் காவலாளிகளை சுடுலகன் முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கி அவர்கள் தலையிலும் கழிவு உராய்வு நீக்கியை ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட கட்டடத்தை உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு வட மாகாண ஆணையாளர் பணித்திருந்ததாகவும் இந்த நிலையில் கடந்த புதன் கிழமை கட்டடத்தை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வந்தபோது, வலி தெற்கு பிரதேச சபைத்தலைவர் கட்டடம் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியதற்கமைய ஒப்பந்தகாரர்களால் செயலக கட்டிடம் அவரிடமே கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வலி.தெற்கு பிரதேச சபை தலைவருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், 'தமக்கு ஆளுனர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார். நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்' எனக்கூறி வலி.தெற்கு பிரதேசசபை தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment