எதியோப்பிய நாட்டு பிரதமர் மெலேஸ் ஷெனவி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை காலை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த இரு மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாதிருந்தார் மெலேஸ் ஷெனவி. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்று மீண்டும் திடீரென நோய்த்தொற்று ஒன்றுக்கு உள்ளாகி அவர் மரணமடைந்துள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கு தற்காலிக பிரதமராக துணை பிரதமர் ஹைல்மரியம் தெசலெகன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிளர்ச்சிக்குழு போராளியான மெலேஸ் ஷெனவி 1991ம் ஆண்டு எதியோப்பியாவின் சர்வாதிகாரி ஹெயில் மரியமிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்.
கடந்த வருடம் எதியோப்பிய படைகள் அமெரிக்க பின்புலத்தின் கீழ் இரண்டாவது முறையாக சோமாலியா மீது படையெடுத்தன. அல் கைதாவின் துணை அமைப்புக்களில் ஒன்றான ஷெஹாப் கிளர்ச்சிக்குழுவினருக்கு எதிராக எதியோப்பிய இராணுவத்தினர் போராடுவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் பின்புலத்தில் இருந்துவந்தன.


No comments:
Post a Comment